இக்கல்வியாண்டின் முதற்பருவத்தில் 16.12.2021அன்று மாலை 3.30 மணிக்கு கல்லூரிக்கலையரங்கில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. முனைவர்.எஸ்.வி,எல். மைக்கேல் (முதல்வர்,மடோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மதுரை)அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழால்முடியும்நம்மால்முடியும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இக்கல்வியாண்டின் இரண்டாவது நிகழ்ச்சியாக 27.12.2021 அன்று மாலை 3.00 மணிக்கு கல்லூரிக் கலையரங்கில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேருயுவகேந்திரா, திருநெல்வேலி ஆகியவற்றுடன் நம் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தியது. நிகழ்வில் திரு ஆ.பெருமாள் (மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி) அவர்கள் சிறப்புரையாற்றினார்.கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
© 2021 Sadakathullah Appa College. All Rights Reserved.